உலகில் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ‘கொசு’ என்பது எவ்வளவு ஆச்சரியமான தகவல். தோற்றத்தில் கொசு சிறிய அளவில் இருந்தாலும், அது ஏற்படுத்தக் கூடிய தாக்கம், விளைவு மிக மிக அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிதான் இது ஆண்டுதோறும் பல உயிர்களை பலி கொள்கிறது. நேரடியாக கொசு கடிப்பதினால் யாரும் உயிரிழந்துவிடுவதில்லை. மாறாக கொசு கடிப்பதால் மலேரியா, […]
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு புதிதாக 60 டன் திறன் கொண்ட ஓசியன் அலையன்ஸ் என்ற இழுவை படகு வந்தது இழுவை படகு வரவேற்பு நிகழ்ச்சியில், துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் மற்றும் மூத்த துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்திய தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இழுவை படகானது 60 டன் திறன், 498 டன் மொத்த உள்புற கனஅளவை கொண்டது. இப்படகு உடுப்பியிலுள்ள, கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டதாகும். வ.உ.சி. துறைமுகம், […]
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் தங்கி கோவிலை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலியபெருமாள், வழக்கம்போல் கோவிலை பராமரித்துவிட்டு கோவிலின் கருவறையை பூட்டிவிட்டு சாவியை தான் படுத்திருந்த தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கினார். இதைத்தொடர்ந்து, அவர் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-“தி.மு.க.வின் இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக சரளை மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 22 விவசாயிகளை பொய்வழக்கில் கைது செய்து தி.மு.க. அரசு சிறையில் அடைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தன்னுடைய தவறுகளை மூடி மறைக்க […]
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி நுகர்வோர் மன்றம், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் வணிகவியல் துறை இணைந்து நுகர்வோர் வார விழாவை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது. கல்லூரிச் செயலர். ப.மகேந்திரன், முதல்வர். மூ.சுப்புலெட்சுமி, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி 18.12.2025 அன்று அய்யனேரி கிராமத்தில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் ஊர்ப்பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பேரணியில் 180 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். […]
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிசம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (19-ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி, […]
மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “இது வளர்ச்சி பாரதம் இல்லை விபரீத பாரதம். இது விக்சித் பாரத் மசோதா அல்ல விரக்தி பாரத்” என விமர்சனம் செய்தார்.இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, மத்திய அரசின் 125 நாள் வேலைக்கான ரோஜ்கர்-அஜிவீகா திட்ட மசோதா மீதான விவாதம் நடந்தது. இந்த தீர்மானம் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:- […]
சபரிமலையில் நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது. மண்டல பூஜையின்போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வருகிற 23-ந்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சன்னிதானத்தில் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-சபரிமலையில், நடப்பு சீசனையொட்டி, நடை திறந்த நாள் முதல் 30 […]
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் கொண்ட திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் – வணிக அமைப்புகள் இளைஞர்கள் விவசாய அமைப்புகள் தொழிலாளர் அமைப்புகள் தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் குழு […]







