நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி நுகர்வோர் மன்றம், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் வணிகவியல் துறை இணைந்து நுகர்வோர் வார விழாவை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
கல்லூரிச் செயலர். ப.மகேந்திரன், முதல்வர். மூ.சுப்புலெட்சுமி, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி 18.12.2025 அன்று அய்யனேரி கிராமத்தில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மேலும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் ஊர்ப்பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பேரணியில் 180 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அய்யனேரி ஊராட்சி மன்றத் தலைவர், மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் ஆ.ரேவதி, நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் செ.வினாயஸ்ரீ, நாட்டு நலப்பணித்திட்டம் ஒருங்கிணைப்பாளர் ரேணுகா தேவி மற்றும் உதவி பேராசிரியர் ப.தர்ஷினி லட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்







