தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், சென்னை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதேபோல, காலையில் பள்ளி மற்றும்கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள், வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது மழையால் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இதனிடையே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் […]
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் 54 ம் ஆண்டு ஆய்வுப்பொழிவு மன்ற வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் ஆசியா பார்ம்ஸ் பாபு தலைமை தாங்கினார். ரவிமாணிக்கம் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் மன்றச்செயலாளர் நம்சீனிவாசன் வரவேற்றார். ஆய்வு பொழிவை உப்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார். ஏடறியா தமிழர்கள் தந்த இலக்கியத்தின் விழுமியங்கள் தொடர்: 4 இயல்பாய் மொழிந்த கவித்துவம் என்ற தலைப்பில் நடந்த ஆய்வுப்பொழிவில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கோமதி […]
குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, இந்த குளிர் கால கூட்டத்தொடர் வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே […]
தென்மேற்கு வங்கக்கடலில் தாழ்வுப்பகுதியாக உருவாகி, இலங்கையை ஒட்டிய பகுதிகளில் வலுப்பெற்ற `டிட்வா’ புயல் நவம்பர் 27-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு இலங்கையில் மழையை வாரி வழங்கியதுடன் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியது..இலங்கை முழுவதும் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. இலங்கையில் இருந்து டிட்வா புயல் தமிழக கடலோரப்பகுதிகளில் 28-ந் தேதி நகர தொடங்கியது. இதன் காரணமாக ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் […]
இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் (Aadhaar App) என்ற புதிய செயலியை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் ஆதார் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அது வந்து உள்ளது. அதன் மூலம் புதிய செல்போன் நம்பர் வாங்குவது, வங்கியில் புதிய கணக்கு தொடங்குவது, ஒட்டலில் தங்குவதற்கு ஆதார் அட்டை நகல் கொடுப்பது அல்லது கைரேகை வைப்பது எல்லாம் இனி தேவையில்லை. அந்த ஆதார் புதிய செயலியில் உள்ள கியூ-ஆர் கோடு காண்பித்தால் போதுமானது. அல்லது […]







