தி.மு.க.வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது, அவருடன் நாஞ்சில் சம்பத் வெளியேறினார். வைகோ புதிதாக தொடங்கிய ம.தி.மு.க.வில் அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சிறந்த பேச்சாளரான இவர் வைகோவுக்கு இணையாக பேச்சாற்றல் பெற்றவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்னோவா கார் […]
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் […]
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மேல் முறையீடு: 2 நாட்களில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த சூழலில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் விசாரணை ஐகோர்ட்டு கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. அப்போது மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை. இந்த சூழலில் நேற்றைய […]
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தி உள்ள 144 உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) இரவு 7 மணிக்குள் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் குழுவினரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை நகர போலீஸ் கமிஷனர் செய்து […]
இண்டிகோ விமான நிறுவனம் நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்தது. இதில் டெல்லி விமான நிலையத்தில் 172 விமானங்களும் அடங்கும்.மும்பை விமான நிலையத்தில் குறைந்தது 118 விமானங்களும், பெங்களூருவில் 100 விமானங்களும், ஐதராபாத்தில் 75 விமானங்களும், கொல்கத்தாவில் 35 விமானங்களும், சென்னையில் 26 விமானங்களும், கோவாவில் 11 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. […]
திருப்பரங்குன்றத்தில் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிப்பார் என்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று மீண்டும் விசாரித்தார். அப்போது நீதிபதி “தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு பாதிக்கப்படவில்லை; […]
பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கும் வகையில் இந்தியா முழுவதும் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்து வருகிறது.இந்தாண்டு தலைப்பாக நீர்மேலாண்மை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென் மண்டல அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹூமான்ஷு மங்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமாரி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார். மாநாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக இருந்த முத்துக்குமாரசாமி. தென்காசியில் தனது அலுவலகத்தில் நேற்று இருந்தபோது, மர்மநபர்கள் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கோவில்பட்டியில் வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்கீல்கள் சங்க தலைவர் சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் கோபி, துணை தலைவர் சிவனுபாண்டி, துணை செயலாளர் சக்திவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் […]
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கட்சிக்கு உரிமை கோரி இருவரும் தேர்தல் ஆணையம் சென்றனர். இரு தரப்பு ஆவணங்களையும் ஆராய்ந்த தேர்தல் ஆணையம் ‘2026ம் ஆன்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர். பாமக நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதற்கான தரவுகள் உள்ளன’ என்று அதிரடியாக அறிவித்தது. தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலை செய்வதாக கூறிய ராமதாஸ் தரப்பு, இது தொடர்பாக […]
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை.நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம். […]







