தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்த திருமதி ஒய் ஜி பி நூற்றாண்டு விழா சென்னை தி நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பழம்பெரும் நடிகை வைஜயந்திமாலாவுக்கு கலாச்சார மேன்மைக்கான திருமதி ஒய் ஜி பி விருதை வழங்கி கவுரவித்தார். கல்யாணி வெங்கட்ராமன் நினைவாக வெங்கட்ராமனால் இந்த விருது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருமதி ஒய் ஜி பி.யுடன் நீண்டகாலம் பணியாற்றிய […]
தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார்; வன்னி அரசு எச்சரிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நடிகர் விஜய் தலைமையில் தவெகவில் இணைவதற்கு பின்னால் பாஜக தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அதிமுகவிலிருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டவுடனே டெல்லிக்கு பறந்து அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் . செங்கோட்டையன். “அமித்ஷாவை சந்தித்து அடுத்து என்ன செய்யலாம்” என ஆலோசனை கேட்கத்தான் வந்ததாக வெளிப்படையாக சொன்னார். இப்போது, தவெகவில் இணைவதும் அமித்ஷாவின் ஆலோசனை […]
அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் இதற்கிடையே […]
மலாக்கா ஜலசந்தி பகுதியில் ‘சென்யார்’ புயல் உருவானது. இது இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்து, அதன் ஆற்றல் மட்டும் தென் சீனக் கடல் பகுதிக்கு சென்றது. இந்த புயலினால் எந்த மழை வாய்ப்பும் நமக்கு இல்லை. இது தவிர தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை -இந்திய கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , தெற்கு இலங்கை மற்றும் அதனியோட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]
மத்திய அரசு சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு திட்டத்திற்கு மடை மாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தேசிய குழு உறுப்பினர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் […]
தூத்துக்குடி கோவில்பட்டியில் இருந்து, தென்காசி திருமலை கோயில் சென்ற தனியார் பஸ்சும் தென்காசியில் இருந்து ராஜபாளையத்தை நோக்கி வந்த மற்றொரு தனியார் பஸ்சும் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர்மொதிகொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் , வேக கட்டுப்பாட்டை பின்பற்றாமல், அதிவேகத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது விபத்துக்கு காரணம் என்று கூறி உள்ளனர். விபத்து ஏற்படுத்திய […]
கோவில்பட்டியில் டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம், தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சைக்கு நடவடிக்கை
கோவில்பட்டி நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையர் சுகந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சீனிவாசன்,பாஜக விஜயகுமார், திமுக ஏஞ்சலா,ராமர், மாரியம்மாள், அதிமுக வள்ளியம்மாள் மாரியப்பன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதியில் குறைகளை எடுத்து கூறினார்கள். உறுப்பினர்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி பதிலளித்து பேசுகையில்கூறியதாவது:- வார்டு சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நகராட்சி நிர்வாகத்தால் முடிவெடுக்க முடியாது. ஒவ்வொரு வார்டு […]
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக, மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கோவில்பட்டி முஹம்மது சாலிஹாபுரத்தைச் சேர்ந்த ஆமினா பீவி, கோவில்பட்டி நகராட்சியில் மாற்றுத் திறனாளி நியமன […]
கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோமு (வயது 55) .இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து சிறைத்தண்டனை அனுபவித்தார். சில மாதங்களுக்கு முன்பு தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வந்தவர் சொந்த ஊரில் விவசாய வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி வீட்டை விட்டு வெளியேறி அவரது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் […]
தஞ்சாவூர், ஜெப மாலைபுரத்தில் 28 ஏக்கரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, குப்பைகளை தரம் பிரிக்க, 2018ல் ‘பயோமைனிங்‘ முறையில், 2.30 லட்சம் கன மீட்டர் அளவுக்கு, குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி, 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது. பின், புதிய நிறுவனத்துக்கு, 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க, 10.60 கோடி ரூபாய் […]







