`சென்யார்’ வலுவிழந்தது : சென்னையை நோக்கி புதிய புயல் நகருகிறது
மலாக்கா ஜலசந்தி பகுதியில் ‘சென்யார்’ புயல் உருவானது. இது இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்து, அதன் ஆற்றல் மட்டும் தென் சீனக் கடல் பகுதிக்கு சென்றது. இந்த புயலினால் எந்த மழை வாய்ப்பும் நமக்கு இல்லை.
இது தவிர தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை -இந்திய கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , தெற்கு இலங்கை மற்றும் அதனியோட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (வியாழக்கிழமை) வலுப்பெற உள்ளது,.

இதன் தொடர்ச்சியாக நாளை(வெள்ளிக்கிழமை) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அன்றைய தினம் நள்ளிரவு வட இலங்கையை யோடடிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வேதர்மேன் ஹமேச்சந்திரன் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் 29-ந் தேதி சனிகிழமை காலை தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரை பகுதியை வந்தடையும் . டெல்டா பகுதிகளில் புயலின் முன்பகுதி நுழையும்,
அதாவது நிலைப்பகுதிகளில் ஊடுருவும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து , 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலை கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது. என்றும் வேதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருக்கிறது,.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேற்சொன்ன 4 நாட்கள் பரவலாக கன முதல் மிக கனமழையும், புயலின் நகர்வை பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்வதற்கான சூழல் இருப்பதாகவே தற்போது கணிக்கப்பட்டிருகிறது,
இந்த பகுதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
புயல் கரைக்கு அருகே வந்து உருவாவதாலும், நிலப்பரப்பில் ஊடுருவல் இருப்பதாலும் காற்று பாதிப்பு இருக்காது. ஆனால் அதேநேரத்தில் மழைக்கான சூழல் அதிகம் இந்த நிகழ்வில் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.







