நடிகை வைஜயந்திமாலாவுக்கு திருமதி ஒய் ஜி பி விருது; ரஜினிகாந்த் வழங்கினார்

தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்த திருமதி ஒய் ஜி பி நூற்றாண்டு விழா சென்னை தி நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பழம்பெரும் நடிகை வைஜயந்திமாலாவுக்கு கலாச்சார மேன்மைக்கான திருமதி ஒய் ஜி பி விருதை வழங்கி கவுரவித்தார்.

கல்யாணி வெங்கட்ராமன் நினைவாக வெங்கட்ராமனால் இந்த விருது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருமதி ஒய் ஜி பி.யுடன் நீண்டகாலம் பணியாற்றிய சுந்தரி சங்கரன், சந்திரா ரமணி மற்றும் விஜி கண்ணன் ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
நாட்டிய நிபுணர் பத்மா சுப்ரமணியம், வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவர் ஐசரி கே கணேஷ், வயலின் கலைஞர் லால்குடி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினர்.

நடிகர் ஏ ஆர் எஸ் காணொலி மூலம் உரையாற்றினார். ஒய் ஜி மதுவந்தி வரவேற்று பேசினார்,..
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒய் ஜி மகேந்திரா மற்றும் சுதா மகேந்திரா தலைமையிலான பாரத் கலாச்சார் ஆலோசனை குழுவினர் செய்திருந்தனர்.







