சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). சில நாட்களுக்கு முன்பு தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற […]
அபிஷேகப் பிரியரான சிவ பெருமானுக்கு தினந்தோறும் அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் சிவ வடிவங்களில் ஒன்றான நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். இந்த ஆறு அபிஷேகங்களில் ஒன்று தான் ஆனி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சன உற்சவம். கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆனி உத்திர திருமஞ்சன உற்சவம் நடக்கிறது,. நிகழச்சிகள் விவரம் வருமாறு:- மாலை 5.45 மணி :கும்ப பூஜை, ஹோமம் மாலை 6.15 மணி: சாயரட்சை பூஜை […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் கமலேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.. இந்த ஆலையில் பலரும் வேலை செய்து வருகிறார்கள். பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் புகை மூட்டம் பல அடி தூரத்துக்கு எழுந்தது.. இந்த வெடிவிபத்தில் 2 பெண்கள் 3 ஆண்கள் என […]







