• June 7, 2025

Month: September 2024

செய்திகள்

பராமரிப்பு பணிகள்: திருச்செந்தூர்- நெல்லை பயணிகள் ரெயில் 25 நாட்கள் ரத்து

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. எனவே அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் விதமாக நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்தை ரத்து செய்ய மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரெயிலும், மாலை 4.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரெயிலும் வருகிற 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை 25 நாட்களுக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கடம்பூர் ராஜு தலைமையில் வரவேற்பு

அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார்.  பின்னர் அங்கிருந்து கோவில்பட்டி வந்தார். காலை 9.3௦ மணி அளவில் கே.ஆர்.விருந்தினர் மாளிகைக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.யும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய அதிமுக  செயலாளர்கள், […]

தூத்துக்குடி

 புகையிலை பொருள் விற்கும் கடைகள் மூடப்படும்; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சில வணிகர்கள் வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும்; நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களைக் கள்ளச்சந்தையில் நமது மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர். இப்பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்;டம் மாவட்ட ஆட்சியர்; தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்  பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.  உணவு வணிகரிடத்திலும், உணவு வணிகரல்லாத இதர வணிகரிடத்திலும் […]

சினிமா

விஜய் நடித்த ` தி கோட்’ வெளியானது; ரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த […]

சினிமா

படக்குழுவினருடன் விஜய் பார்த்த  `தி கோட்’ – அஜித் வாழ்த்து

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் உள்ளன, இந்த படத்தில் விஜய் இரட்டை […]

சினிமா

மாரி செல்வராஜை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாழை’. இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ‘வெயில்’ படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘வாழை’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து அமைச்சர் […]

செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்க நிதி ஆதாரம் இல்லை என கூறுவது ஏற்புடையது அல்ல-

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 153 வது பிறந்த நாளையொட்டி துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ படத்துக்கு அதிமுக சார்பில்,கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விடியாத கார்ப்பரேட் அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருகிறது. ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட வைத்த விடியா திமுக அரசுக்கு ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கு அருகதையே இல்லை […]

தூத்துக்குடி

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுக்கான 3-வது மாதிரி தேர்வு,

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை போட்டித் தேர்வு ஆர்வலர்கள் டி.என்..பி.எஸ்.சி. குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வினை எளிமையாக எதிர்கொள்ள  மாநில அளவிலான 3 இலவச முழு மாதிரித் தேர்வுகள்  நடத்திட  திட்டமிட்டுள்ளது. இரண்டு மாதிரி தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டது.  மூன்றாவது மாதிரி தேர்வு  நாளை   (6.9.2024) வெள்ளிகிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி இதில்  […]