டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுக்கான 3-வது மாதிரி தேர்வு, தூத்துக்குடியில் நாளை நடக்கிறது
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை போட்டித் தேர்வு ஆர்வலர்கள் டி.என்..பி.எஸ்.சி. குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வினை எளிமையாக எதிர்கொள்ள மாநில அளவிலான 3 இலவச முழு மாதிரித் தேர்வுகள் நடத்திட திட்டமிட்டுள்ளது.
இரண்டு மாதிரி தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டது. மூன்றாவது மாதிரி தேர்வு நாளை (6.9.2024) வெள்ளிகிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
தேர்வு நடைபெறும் இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி
இதில் தன்னார்வப் பயிலும் வட்ட (Study Circle) மாணவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்வு ஆர்வலர்கள் (Aspirants) அனைவரும் கீழ்க்காணும் கூகுள் லிங்க் வாயிலாக பதிவு செய்து கலந்து கொள்ளலாம். மாதிரி தேர்வுக்கு வருகை புரியும் மாணவர்கள் அனைவரும் ஹால் டிக்கெட் நகலினை எடுத்து வர வேண்டும்.
\Registration Google form:👇🏻
தேர்வின் சிறப்பம்சம்:*
மாநில அளவிலான தரவரிசை, OMR – மதிப்பீடு, PDF – விடை குறிப்புகள், Qtns – கலந்துரையாடல் நடைபெறும்.
மேற்கண்ட தகவல்களை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.