ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்க நிதி ஆதாரம் இல்லை என கூறுவது ஏற்புடையது அல்ல- டி. ஜெயக்குமார்
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 153 வது பிறந்த நாளையொட்டி துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ படத்துக்கு அதிமுக சார்பில்,கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விடியாத கார்ப்பரேட் அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருகிறது. ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட வைத்த விடியா திமுக அரசுக்கு ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கு அருகதையே இல்லை
ஆசிரியர் தினமான இன்று 15,000 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் அவர்களது வீட்டில் அடுப்பெரியாத நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்படுகிறார்.அவர் அமைச்சரா? இல்லை உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவரா? என்ற கேள்வி எழுகிறது
\தமிழக முதலமைச்சரின் தந்தையின் புகழை பாடுவதற்கு நிதியை செலவழிக்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு நிதி ஆதாரம் இல்லை என கூறுவது ஏற்புடையது அல்ல
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.