விஜய் நடித்த ` தி கோட்’ வெளியானது; ரசிகர்கள் கொண்டாட்டம்
![விஜய் நடித்த ` தி கோட்’ வெளியானது; ரசிகர்கள் கொண்டாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2024/09/large_goat-188883.jpg)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கியது. அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது.. அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், கேரள மாநிலத்தில் அதிகாலை 4 மணிக்கு ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகியது. அந்த மாநிலத்தின் தம்பானூர் பகுதியில் உள்ள நியூ திரையரங்கில் திரையிடப்படும் இரண்டாவது காட்சிக்காக, மொத்த டிக்கெட்டையும் நடிகர் விஜய்யின் பெண் ரசிகர் மன்றம் வாங்கி மொத்த திரையரங்கத்தையும் மிரள வைத்தது. இந்த பெண் ரசிகர் மன்றம் தொடங்கி 9 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)