புகையிலை பொருள் விற்கும் கடைகள் மூடப்படும்; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சில வணிகர்கள் வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும்; நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களைக் கள்ளச்சந்தையில் நமது மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர்.
இப்பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்;டம் மாவட்ட ஆட்சியர்; தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.
உணவு வணிகரிடத்திலும், உணவு வணிகரல்லாத இதர வணிகரிடத்திலும் காவல் துறை, உணவு பாதுகாப்புத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்; மூலம் தனிப்பட்ட ஆய்வு அல்லது கூட்டாய்வு செய்யப்படும். அவ்வாய்வின் போது, தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவுச் சான்றிதழ் தற்காலிக ரத்து செய்யப்பட்டு, கடை மூடப்படும்.
மேலும், குற்றம் புரிந்த உணவு வணிகர் நன்னடத்தை பிணை ஆவணம் ஏற்படுத்த ஏதுவாக நியமன அலுவலரால் சம்பந்தப்பட்ட பகுதி வருவாய் கோட்டாட்சியர்/ உட்கோட்ட நிர்வாக நடுவருக்கு முன்மொழிவு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதி வருவாய் கோட்டாட்சியர் நன்னடத்தை பிணை ஆவணம் ஏற்படுத்த ஆணை வழங்கிடுவார்.
சம்பந்தப்பட்ட உணவு வணிகர் நன்னடத்தை பிணை ஆவணம் சமர்பித்த பின்னர், வருவாய் கோட்டாட்சியர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், குற்றத்தின் தன்மை மற்றும் வணிக வகைக்கு ஏற்ப மாவட்ட நியமன அலுவலர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் அபராதம் விதித்து உத்தரவிட்ட பின்னரே கடையைத் திறக்க இயலும். முதல் முறை குற்றத்திற்கு ரூ.25,000/- அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் முறை குற்றம் செய்பவர்கள் மேற்கூறியவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இரட்டிப்பு அபராதம் அதாவது, ரூ.50,000/- அபராதம் விதிக்கப்படும்.
மூன்றாம் முறை குற்றம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவுச் சான்றிதழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, கடை மூடப்பட்டு, வணிகரின் வகைக்கேற்ப நியமன அலுவலர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரால் ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்படும்.
ஆனால், 90 நாட்களுக்குப் பின்னரே புதிய உணவு பாதுகாப்பு உரிமம்;/பதிவுச் சான்றிதழுக்கு வணிகர் விண்ணப்பிக்க இயலும். இந்த அபராதத்தினை அரசு கருவூல இணையதளத்தில் வணிகர் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய பின்னரே கடையானது மீண்டும் திறக்கப்படும்.
உணவு மாதிரி எடுக்கப்பட்ட வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதித்துறை நடுவரால் விசாரிக்கப்பட்டு, ரூ.5,00,000/- வரை அபராதமும், 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
.மேலும், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க விரும்பினால் கீழ்கண்ட எண்கள் செயலி மூலம் புகார் அளிக்கலாம். இது தொடர்பான புகார்களுக்கு: 9444042322, 0461-2900669, https://foodsafety.tn.gov.in, TN Food Safety Consumer App. அவ்வாறு புகார் அளிக்கும் நுகர்வோர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.