பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது. குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் […]
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் எனும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் முனைவர் மு. பவானி வரவேற்று பேசினார். தமிழ்த்துறை தலைவர் இரா. சேதுராமன் நோக்கவுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் வெ. இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். நாகம்பட்டி BSNL ஓய்வு பெற்ற ச. காளியப்பன், ஷபி டிரேடர்ஸ் பணியாளர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் மற்றும் […]
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிபோட்டிக்கு முன்னேறிய நிலையில் நேற்று அவர் தகுதி நீக்கம் செய்யபப்ட்டு உள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- வினேஷ், நீங்கள் ‘அனைத்து வகையிலும்‘ உண்மையான சாம்பியன். உங்கள் மீளும் திறன், வலிமை மற்றும் இறுதிப் போட்டியை நோக்கிய குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. சில கிராம் எடையால் தகுதியிழந்தது, உங்கள் மனதையும் சாதனைகளையும் குறைத்து […]
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:- சில நாட்களுக்கு முன்பு, எனது சகோதரியுடன் வயநாடுக்கு சென்றேன். அங்கு சோகத்தால் நிறைந்த வலியையும், வேதனையையும் என் கண்களால் பார்த்தேன். 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், ராணுவம், கடற்படை, விமானப்படை, தீயணைப்புத்துறை மற்றும் அண்டை மாநிலங்களாக கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்டவைகளின் உதவிகளை நான் பாராட்ட விரும்புகிறேன். இது மிகப் பெரிய […]
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்/ அப்போது அவர் பேசியதாவது:- \செல்போன் பயன்படுத்தும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்களது புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை தேவையில்லாமல் சமூக வலை தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். அப்படி உங்களது புகைப்படம் மற்றும் வீடியோவை வைத்து யாராவது மிரட்டினால் தயங்காமல் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி ஆகிய பூஜைகள் நடந்தன. காலை 8 மணிக்கு விளா பூஜை, பகல் 11.30 உச்சி கால பூஜை ஆகியவை நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு சாயரட்சை பூஜை […]
தூத்துக்குடி மாவட்ட போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் தனியார் மண்டபத்தில் நடந்தது.கூட்டத்திற்குசங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் துரைராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கவுரவத்தலைவர் பிச்சையா, தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் துரைராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். பொருளாளர் ராமன், நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக கண்ணன், செயலாளராக ரெங்கராஜ், பொருளாளராக முத்துராஜ், துணைத் தலைவராக ரவி, துணைச் செயலாளராக சம்சுதீன் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். […]
தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன. இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது. […]







