மருத்துவகுணம் நிறைந்த பிரண்டை

 மருத்துவகுணம் நிறைந்த பிரண்டை

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.

அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது. குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும்  பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..

மூலம் நோய் உள்ளவர்களுக்கு உரிய  மருந்தாகவும், ஏற்ற உணவாகவும் பயன்படுகிறது.இந்த மூலிகையை “குத ரோக நாசினி” என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட  குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.மற்றும் இயற்கை கால்சியம்  அதிகம் உள்ளது  .

இவ்வாறு இருக்க  நாம்  ஏன் அனாவசியமாக  கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க…..

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ……..

தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ இதற்கு மற்றொரு பெயர் “வஜ்ஜிரவல்லி” எனப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *