கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று செவ்வாய்கிழமை மாலை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனையும், நந்தியம் பெருமானையும் தரிசனம் செய்தனர்
சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை செடிகளின் பயன்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கரிசல்குளம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.மூலிகை தோட்டத்தில் நீர்பிரம்மி,மஞ்சள் கரிசாலை,துளசி, பிரண்டை, நித்தியகல்யாணி, திருநீற்றுப்பச்சிலை, சங்குபுஷ்பம், துத்தி,உள்ளிட்ட 30 வகையான மூலிகை செடிகள் இடம் பெற்றுள்ளன. 3 பள்ளிகளிலும் மூலிகை தோட்டம் இன்று திறந்து […]
கோவில்பட்டியில் மீண்டும் ஆட்டுச்சந்தை; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தினர் வலியுறுத்தல்
கோவில்பட்டி புது ரோடு முத்தையா அம்மாள் தெருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இயக்கத் தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார் கண்ணன், கணேசமூர்த்தி, ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர் முருகேசப் பாண்டியன் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி, மதிமுத்து, பரமசிவம், அந்தோணி ராஜ், முத்து பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் […]
நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று (23/1/2024) சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக விவசாய அணித் தலைவர் ஏ.கே.எஸ்.விஜயன், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.பி.எம்.பி.எழிலரசன், எழிலன் நாகநாதன், […]
கோவில்பட்டி ராஜிவ் நகர் இபி காலனியில் பா.ஜனதா ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து இல்லத்தில் வைத்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமருக்கு சிறப்பு பூஜை விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது. கோவில்பட்டி காவுடியா மடம் மகாராஜா தலைமையில் பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது பூஜையில் பங்கேற்றவர்களுக்கு ராமர் புகைப்படம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய ப.ஜனதா தலைவர் மாடசாமி, பொதுச் செயலாளர் சந்தானம், கலை பிரிவு மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, மகளிர் மாவட்டத் துணைத் […]
கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் உலகபுகழ்பெற்ற புனித பரலோக மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராயலத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியது மட்டுமின்றி காமநாயக்கன்பட்டியில் வாழ்ந்து தேன் சிந்தும் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் நினைவாக தமிழக அரசு சார்பில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் அவருடைய திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். காமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் […]
கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருத்துவமனை முன்புறம் ஓய்வூதிய தொழிலாளர்கள் மற்றும் முக்குலத்தோர் தொழிற்சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முக்குலத்தோர் தொழிற்சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொன்னையா, பரமசிவம், சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:- *ஆன்லைனில் எளிதான முறையில் பதிவு செய்திட சரியான வழிவகை செய்திடு. *ஆன்லைன் சரியாக இயங்கவில்லை என்றால் மாற்று குத்தகைதாரர் தரவேண்டும். *நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஓய்வு […]
பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றியம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட E.B காலனி, ஆனந்தம் நகர் 2,3 தெரு, SSD நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் டெங்கு […]
எட்டையபுரத்தில் புதிதாக ரூ.1.84-கோடி மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்கள். சார்பதிவாளர் (பொறுப்பு) பகவதிசெல்வி, அலுவலக உதவியாளர் விக்னேஷ் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், முன்னாள் மில் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் ,மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், வார்டு உறுப்பினர் […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி.) டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக குழுக்களாக வந்தவாறு உள்ளனர். சாலையில் இடது புறமாக குழுக்களாக நடந்து செல்கிறார்கள. அதே சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் எப்பொழுதும் இடது புறமாகவே இயக்குவதால் வாகனங்கள் பக்தர்கள் மீது மோத வாய்ப்புள்ளது. ,அவ்வாறு வாகனங்கள் மோதுவதை எதிர்பார்க்க இயலாததாலும் கனரக வாகனங்கள் பக்தர்கள் மீது […]







