கோவில்பட்டியில் மீண்டும் ஆட்டுச்சந்தை; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தினர் வலியுறுத்தல்
கோவில்பட்டி புது ரோடு முத்தையா அம்மாள் தெருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு இயக்கத் தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார் கண்ணன், கணேசமூர்த்தி, ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர் முருகேசப் பாண்டியன் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி, மதிமுத்து, பரமசிவம், அந்தோணி ராஜ், முத்து பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தினர் கோவில்பட்டி நகராட்சிக்கு சென்று நகர் மன்ற தலைவர் கருணாநிதியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், “ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் செயல்பட்டு வந்த ஆட்டுச் சந்தையை மீண்டும் செயல்படுத்திட வேண்டும். நேதாஜி திருவுருவ சிலை கோவில்பட்டியில் அமைய தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று கோவில்பட்டி நகர்மன்ற கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.







