கயத்தார் அருகே உள்ள தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளியில்.தமிழர் திருநாளாம் தை பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பங்கேற்ற மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர், மானவர்கள் வேட்டி-சட்டை, மாணவிகள் சேலை அணிந்து இருந்தனர். விழாவில் மாவட்ட கவுண்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் […]
தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2024 ஜனவரி மாதத்திற்குரிய வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (19.1.2024) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாதாந்திர வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம். மேலும் […]
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி கலந்து கொண்டு 526 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை […]
மழைவெள்ளத்தில் சேதம்: `பரியேறும் பெருமாள்’ படத்தில் பாடிய கலைஞர்களுக்கு புதிய இசைக்கருவிகளை வாங்கி
பரியேறும் பெருமாள் படத்தில் ‘எங்கும் புகழ்’ பாடலுக்கு பாடிய ஸ்ரீ வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன் ஆகியோரது வீடு கனமழையால் சேதமாகி அங்கிருந்த நாதஸ்வரம், தவில், உருமி, பம்பை மேளம் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையறிந்த கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இழப்புகளை பற்றி கவலைப்பட வேண்டாம் என […]
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் அயலக தமிழர் தினம் 2024 விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வேர்களை ததேடி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பண்பாட்டு சுற்றுலா மேற்கொண்ட ஆஸ்திரேலியா, கனடா, பிஜி. இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தமிழ் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினரின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய ஆய்வு குழுவை சேர்ந்த கே.பி. சிங், ரங்கநாத் ஆதம், தங்கமணி, டாக்டர் பொன்னுச்சாமி, ராஜேஷ் திவாரி, பாலாஜி, விஜயகுமார் ஆகிய 7 பேர் கொண்ட குழு மற்றும் தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட எஸ்.பி. பாலாஜி […]
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு அருவடி பண்டிகை ஆகும். இந்த விழா தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதும் சூரியனுக்கும் மற்ற உயரிகளுக்கும் சொல்லும் ஒரு நன்றியரியதளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கயும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது […]
கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் 10 ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா புதுரோடு முத்தையாமல் தெருவில் நற்பணி இயக்கத்தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது, இதையொட்டி நடந்த கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு முருகேசபாண்டியன் சேலை மற்றும் பரிசுகள் வழங்கினார், விழாவில் கணேசமூர்த்தி, கிருஷ்ணசாமி, ரத்திணவேல், மதிமுத்து,சேகர், காமராஜ், ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தலைமைக்கழகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு :- மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் இந்த கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் உரிமை உள்ள ஒரே கட்சி கழகம்தான். மொழியை வைத்து வியாபாரம் செய்கின்ற கும்பல் திராவிட முன்னேற்றக் கழக கும்பல்.மொழியை வளர்ப்பது கழகம்தான்.கோப்புகளில் தமிழில் கையொப்பம் இட […]
சென்னையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரமாண்ட கலைவிழா ஜன.13 அன்று தமிழ்நாடு முதல்வரால் சென்னை தீவுத்திடல் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன. 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். தீவுத்திடல், மாநகராட்சி விளையாட்டு மைதானம்,கொளத்தூர், முரசொலிமாறன் மேம்பால பூங்கா (தெற்கு),பெரம்பூர், ராபின்சன் விளையாட்டு […]







