சமத்துவ பொங்கல் விழா
கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் 10 ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா புதுரோடு முத்தையாமல் தெருவில் நற்பணி இயக்கத்தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது,
இதையொட்டி நடந்த கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு முருகேசபாண்டியன் சேலை மற்றும் பரிசுகள் வழங்கினார், விழாவில் கணேசமூர்த்தி, கிருஷ்ணசாமி, ரத்திணவேல், மதிமுத்து,சேகர், காமராஜ், ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







