பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் : கோவில்பட்டி மக்கள் தயார் ஆகிறார்கள்
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு அருவடி பண்டிகை ஆகும். இந்த விழா தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதும் சூரியனுக்கும் மற்ற உயரிகளுக்கும் சொல்லும் ஒரு நன்றியரியதளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கயும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை, மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். இந்த ஆண்டு போகி 14-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) வருகிறது. தை மாத முதல் நாள் (15ந்தேதி) பொங்கல் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 16 ந்தேதி மாட்டுப்பொங்கல். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.


இறுதிநாள் விழாவாக 17 ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே இருப்பதால்கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட ஆர்வத்துடன் உள்ளனர். மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கரும்புகள் கோவில்பட்டியில் குவியத்தொடங்கி உள்ளன.
மதுரை மாவட்ட மேலூர் பகுதியில் இருந்து லாரிகளில் கரும்புகள் வந்த வண்ணம் உள்ளன. 10 கரும்புகள் கொன்ட ஒரு கட்டு ரூ.450 என்ற விலையில் விற்கப்படுகிறது. மேலும் மந்தித்தோப்பு பகுதியில் மஞ்சள் கிழங்கு அறுவடை தொடங்கி உள்ளது. மேலும் முக்கிய பொருளான பொங்கல் பானைகள் விற்பனை களை கட்டி வருகிறது.
குறிப்பாக கோவில்பட்டி கடலைக்கார தெருவில் உள்ள மானாமதுரை கூஜா கடையில் விதவிதமான பொங்கல் பானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன,.பொங்கல் பானை ரூ.150,180விலையிலும் , அடுப்பு ரூ. 140.160 விலையிலும் விற்கப்படுகிறது. வர்ணம் பூசப்பட்ட பொங்கல் பானை ரூ.200க்கு விற்கப்பட்டு வருகிறது.







