மழைவெள்ளத்தில் சேதம்: `பரியேறும் பெருமாள்’ படத்தில் பாடிய கலைஞர்களுக்கு புதிய இசைக்கருவிகளை வாங்கி கொடுத்த கனிமொழி எம்.பி.
பரியேறும் பெருமாள் படத்தில் ‘எங்கும் புகழ்’ பாடலுக்கு பாடிய ஸ்ரீ வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன் ஆகியோரது வீடு கனமழையால் சேதமாகி அங்கிருந்த நாதஸ்வரம், தவில், உருமி, பம்பை மேளம் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனையறிந்த கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இழப்புகளை பற்றி கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்குப் புதிதாக இசைக்கருவிகள் வழங்கப்படும் எனவும் அவர்களிடம் சில தினங்களுக்கு முன்பு உறுதி அளித்தார்
அதனை தொடந்து இன்று (12/1/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், இசைக்கலைஞர்களுக்கு புதிய இசைக்கருவிகளை கனிமொழி எம்.பி.வாங்கி கொடுத்தார். இருவருக்கும் தலா ஒரு நாதஸ்வரம், இரண்டு தவில், ஒரு உருமி, ஒரு பம்பை மேளம் ஆகியவை ஆகும்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
.







