தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
2024 ஜனவரி மாதத்திற்குரிய வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (19.1.2024) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாதாந்திர வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம்.
மேலும் தமிழ்நாடு அரசு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவுசெய்யாத வேலையளிப்போர்கள் TN private job portal(https://tnprivatejobs.tn.gov.in) என்ற இணையத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள GST & Pan card ஆகிய இரண்டு நகல்களையும் பதிவேற்றம் செய்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இம்முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து கல்வித்தகுதியுடைய வேலைநாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வர் . இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகைபுரிந்து இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form- இல் உங்கள் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
google form
👇👇👇👇







