சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய உடை அணிந்து அசத்திய கிராமத்து மாணவர்கள்
கயத்தார் அருகே உள்ள தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளியில்.தமிழர் திருநாளாம் தை பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பங்கேற்ற மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர், மானவர்கள் வேட்டி-சட்டை, மாணவிகள் சேலை அணிந்து இருந்தனர்.

விழாவில் மாவட்ட கவுண்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ராஜ், நல்லாசிரியர் ராஜையா ,ஆசிரியை ஜெயராணி,ஊர் பிரமுகர்கள்,பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள்,சத்துணவு ஊழியர்கள் உள்பட பலர். கலந்துகொண்டனர்.







