பா. ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவுப்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் ஆலோசனைப்படி கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற சக்தி கேந்திர பொறுப்பாளர் அம்மன் மாரிமுத்து அவர்கள் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்கள் உடன் நகர பிரபாரி லட்சுமணன் அவர்கள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் நன்றி
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் வருகிற 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கடைசியாக பழனி கோவிலுக்கு கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளும்பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. www.palanimurugan.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in என்று இணையதளத்திற்கு சென்று ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், […]
எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவசிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ”நான் சர்வாதிகாரி அல்ல. கட்சி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”, என்று கூறி சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து குறித்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி சசிகலா சொல்வதையே, ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். முதலில் அவர்கள் 2 பேரும் ஒன்றுபடட்டும். அவர்களுக்கும், […]
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது. அதன்படி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 3 மாநில தேர்தல் இன்று அறிவிப்பை வெளியிட்டார். அதில், திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி.16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன.21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. மறுபரிசீலனை ஜன.31-ம் தேியும், மனுக்களை வாபஸ் பொறுவதற்காகான தேதி பிப்ரவரி.2-ம் தேதியும் நடைபெற உள்ளது. […]
திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனி தசை, ராகு தசை நடப்பவர்களுக்கும் சிறந்த_பரிகார_ஸ்தலமக சிங்கபெருமாள் கோவில் விளங்குகிறது. நரசிம்மரின் பெயரால் சென்னை அருகே செங்கல்பட்டு செல்லும் வழியில் “சிங்க பெருமாள் கோவில்” அமைந்துள்ளது. ஜாபாலி என்னும் மகரிஷி, பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக சேவிக்க வேண்டும் என்று வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. அவரது தவத்திற்கிணங்கி பெருமாள் பிரதோஷ வேளையில் உக்ர நரசிம்மராக சிவந்த கண்களோடு பாடலாத்ரி மீது தரிசனம் தந்தார். முனிவர் […]
தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதற்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-“2023 ஜனவரி […]
கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் பொங்கல் விளையாட்டு போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
கோவில்பட்டி அப்பனேரி பஞ்சாயத்து வெங்கடேஸ்வரா கார்டன் பகுதி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் வழக்கம் போல் . இந்த ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன, அதன்படி ., பொங்கலன்று காலை முதல் மாலை வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன, அதன் விவரம் வருமாறு:- சிறுவர்கள்(5 முதல் 8 வயது வரை) திருக்குறள் போட்டி ஓட்டப்பந்தம்- 50 மீட்டர் ஸ்லோ சைக்கிள் பந்தயம்-50 […]
தமிழ்நாடு ஆக்கி சங்கத் தலைவர் சேகர் ஜே.மனோகரன், செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வருகிற பிப்ரவரி. 15-ந்தேதி தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் விளையாடும் தமிழக அணிக்கு வீராங்கனைகள் தேர்வு கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் நாளை(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வீராங்கனைகள், தங்களது ஆதார் மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், அந்தந்த மாவட்ட […]
தமிழக போக்குவரத்து துறையின் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் நடைபெற்றது.அனைத்து பொதுமக்களுக்கும் சாலையில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவதற்கும் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையில் நடப்பதற்கும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரங்களை அம்மன் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மாரிமுத்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த வர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தி துண்டு […]
இன்று (16.01.2023) காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பயங்கரமாக சப்தம் எழுப்பிக் கொண்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொதுஇடங்களில் அமர்ந்து மது அருந்தி கலகம் விளைவிப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் எச்சரிக்கை. ♻️தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு பீச், பூங்கா […]







