கோவில்பட்டி நகரசபை சார்பில் பயணிகள் விடுதி முன்பிருந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை நகரசபை தலைவர் கா.கருணாநிதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் நகரசபை ஆணையாளர் ராஜாராம், சுகாதார அதிகாரி நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் வள்ளி ராஜ், காஜா நஜிமுதீன், முருகன், நகரசபை கவுன்சிலர்கள் தவமணி, சுதாகுமாரி, மணிமாலா, சித்ரா மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி மெயின் ரோடு, பார்க் ரோடு வழியாக நகரசபை அலுவலகம் சென்று நிறைவடைந்தது.
கோவில்பட்டி மின்வாரிய கோட்டப் பகுதியிலுள்ள மின் மின்நுகர்வோர்கள், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. தொடர்ந்து 13-ந்தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இன்று (11-ந் தேதி))கோவில்பட்டி நகர், கிழக்குப் பகுதி திட்டங்குளம், பங்களா தெரு, மேற்கு பகுதி ஆலம்பட்டி, தோணுகால் விலக்கு, வடக்கு பகுதி கோவில்பட்டி, தெற்கு பகுதி கோவில்பட்டி, பாரதி நகர். கிராமப் பகுதிகளுக்கு காம நாயக்கன்பட்டி, கழுகுமலை, […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. எம்.ஜி,ஆர்.,106-வது பிறந்தநாள் மற்றும் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் விழாக்களை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.,ஜெயக்குமார் பேசியபோது எடுத்த படம். அருகில் கட்சியின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.வி.உதயகுமார் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளனர்.
தூத்துக்குடியில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் டி.வி., இன்டர்நெட் வயர்களை அகற்றும் பணி; மின்வாரிய
தூத்துக்குடி அண்ணா நகரில் 2019ம் ஆண்டு மின்கம்பத்தில் கேபிள் டிவி வயரைக் கட்டிக் கொண்டிருந்தபோது, கேபிள்டிவி ஆப்ரேட்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி, இன்டெர்நெட் வயர்களை உடன்டியாக அகற்ற வேண்டும் என மின்வாரியம் அறிவித்தது. இது தொடர்பாக கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள், இன்டர்நெட் நிறுவன பிரதிநிதிகளுடன் மின்வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், மின்வாரியத்திற்குச் சொந்தமான மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளுக்கு அடியில் எவ்வித அனுமதியும் பெறாமல் பொருத்தப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி வயா்கள், பதாதைகளையும் […]
அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் சார்பில் கோவில்பட்டி தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயாவில் மகாகவி பாரதி விழா நடைபெற்றது. அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் தலைவர் ஆவடிக்குமார் தலைமை தாங்கினார், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுப் பேசினார். இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செ.முருகசரஸ்வதி எழுதிய எரிமலையின் மௌனங்கள் என்ற நூலை தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குநர் சேகர், கவிஞர் முருகேஸ்வரி ராஜேஸ்வரி எழுதிய விதை என்ற நூலை ராமநாதபுரம் கம்பன் கழகத் தலைவர் சுந்தர்ராஜன் […]
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை கட்டுப்படுத்தி அழிக்க வலியுறுத்தி வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து மனு அளித்தார். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, 20.12.2022 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் நேரில் சந்தித்து […]
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்; ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் முன்னிலையில் இன்று தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று ஒருநாள் மட்டுமின்றி இந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்கள் மற்றும் மாநகராட்சி என […]
திருச்சி ஸ்ரீரங்கத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவராக ரெங்கராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ராம காளியப்பன். புதிதாக பொறுப்பேற்றுள்ள ரெங்கராஜனை நேரில் வாழ்த்தி அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார். ரெங்கராஜனை வாழ்த்தி மாவட்ட செயலாளர் ராம காளியப்பன் இணை செயலாளர் மாரிமுத்து, ராஜகோபால் மாவட்ட பொறுப்பாளர்., மாவட்ட திருக்கோவில் திரு மடங்கள் அமைப்பாளர் தளவாய் ராஜ். உள்பட […]
கோவில்பட்டி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான யோகா போட்டி நடைபெற்றது. போட்டியில் 30 பள்ளிகளில் இருந்து 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் நீலமேகன், பகத்சிங் ரத்ததான கழகம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு யோகா போட்டியில் […]
தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் உள்ள சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்ததால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கூட்டம் முடியும் முன்பே கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கவர்னருக்கு ஆதரவாக ‘ஆளுநரின் ஆளுமையே’ என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை […]







