தூத்துக்குடியில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் டி.வி., இன்டர்நெட் வயர்களை அகற்றும் பணி; மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்
தூத்துக்குடி அண்ணா நகரில் 2019ம் ஆண்டு மின்கம்பத்தில் கேபிள் டிவி வயரைக் கட்டிக் கொண்டிருந்தபோது, கேபிள்டிவி ஆப்ரேட்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி, இன்டெர்நெட் வயர்களை உடன்டியாக அகற்ற வேண்டும் என மின்வாரியம் அறிவித்தது. இது தொடர்பாக கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள், இன்டர்நெட் நிறுவன பிரதிநிதிகளுடன் மின்வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும், மின்வாரியத்திற்குச் சொந்தமான மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளுக்கு அடியில் எவ்வித அனுமதியும் பெறாமல் பொருத்தப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி வயா்கள், பதாதைகளையும் அகற்றிட பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அவை அகற்றப்படவில்லை. இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூா் சாலை, தாமஸ் நகா் மற்றும் பனிமய மாதா நகா் ஆகிய பகுதிகளில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் டிவி வயா்கள், பதாகைகள் அனைத்தையும் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.
இப்பணிகளில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் உமையொருபாகம் (தெற்கு), பிரேம், (வடக்கு), உதவி பொறியாளர்கள் பெருமாள் ராபர்ட், மற்றும் மின்வாரிய ஊழியர்கள் 60பேர் ஈடுபட்டனர்.
இதுபோல் தூத்துக்குடி நகரின் பிற பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.







