அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் நாளை (9-ந் தேதி) அன்று பேரூராட்சிகளிலும், […]
தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாமல், நிலைத்த தன்மையற்ற வீடு, வாழ தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுக்க உள்ளது. தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் அல்லது இதர ஓலைகளை கொண்டு கூரை வேயப்பட்ட வீடுகள், தகரம் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் கூரை வீடுகள் கணக்கெடுப்புக்கு தகுதியான வீடுகளாகும்.மண், சுடப்படாத செங்கல், மண் கலவையுடன் கூடிய கருங்கல், சிமெண்ட் பலகை போன்ற நிலைத்த தன்மையற்ற […]
பிரபல நகைச்சுவை நடிகர் டி. சிவ நாராயணமுர்த்தி நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67 பட்டுக்கோட்டையை சேர்ந்த சிவ நாராயணமூர்த்தியின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விவேக் மற்றும் வடிவேலு காமெடிகளில் முக்கிய துணை நடிகராக நடித்து வந்த நடிகர் சிவநாராயணமூர்த்தியை நடிகரும் இயக்குநருமான விசு அறிமுகம் செய்து வைத்தார். பூந்தோட்டம் என்ற படத்தில் முதன் முதலாக நடித்த சிவநாராயணமூர்த்தி 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் […]
குக்கூ படத்தில் “கொடையில மழை போல ” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார் பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான வைக்கம் விஜயலட்சுமி.பின்னர் சொப்பன சுந்தரி நான் தானே” என்ற பாடல் மூலம் பிரபலமானார்.அதற்கு முன் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த செல்லுலாய்டு என்கிற படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். விஜயலட்சுமிக்கு கடந்த 2016ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன்பிறகு அந்த மணமகன் ஏராளமான நிபந்தனைகள் போடுவதாக கூறி அந்த திருமணமே வேண்டாம் என நிறுத்தினார்.பின்னர் கடந்த 2018ல் இன்டீரியர் […]
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-அரசியல் அமைப்புச் சட்டம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் அரசியல் சட்டத்தை ஏற்று அதை முறையாக அமலாக்க கூடிய நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சி ஆட்சிக்கு வந்தால் அச்சட்டம் நிலைத்து நிற்கும் .2014 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பு அற்றது. மதச்சார்பின்மை ஜனநாயகம் கூட்டாட்சி சுய […]
அ.தி.மு.க. 4 குழுக்களாக சிதறி இருப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்; திருமாவளவன் சொல்கிறார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுவிட்டு இன்று காலை சென்னை திரும்பினார்.சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தில் பா.ஜ.க.வினர் நிறைய காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க. நகைச்சுவை செய்து, அவர்களே சிரித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை.தமிழ்நாட்டை குறி வைத்து உள்ள பா.ஜ.க., இளையராஜா […]
டெல்லி அனைத்து கட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்புக்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். சென்னை:வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஜி20 என்ற அமைப்பு உள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றனஜி20 அமைப்பின் அடுத்த சர்வதேச மாநாட்டை டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 19-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜி20 மாநாட்டுக்கு இந்தியா […]
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:-நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இது அவருக்கு பெருமை அல்ல. இந்த நாட்டு மக்களுக்கு பெருமை. வாக்குக்காகத்தான் பா.ஜ.க., அம்பேத்கரை கொண்டாடுகிறதஎன்.எல்.சி.யில் வேலை வாய்ப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்படுகிறது. அதை எதிர்த்துப் போராடப்போகிறோம். அனைத்து இடங்களிலும் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு குடும்ப அட்டை கொடுங்கள். ஆனால், […]
திருக்கார்த்திகை தினமான இன்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்புறம் விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர் மாவட்ட செயலாளர் காளியப்பன் முன்னிலையில், திருக்கோவில் திருமடங்கள் மாவட்ட இணை அமைப்பாளர் தளவாய்ராஜ் தலைமையில் நெய்விளக்கு ஏற்றி பிரார்த்தனை நடத்தினார்கள்.தமிழகத்தில் இனிமேல் எந்த ஒரு இந்து கோவிலும் எவ்வித காரணமும் கூறி அகற்றப்படாமல் இருக்க செண்பகவல்லி அம்மனை வேண்டி நடந்த இந்த பிரார்த்தனையில் பா.ஜ.க.மாவட்ட பொதுசெயலாளர் வேல்ராஜா, பிரசாரபிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணக்குமார், ABGP மண்டல ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், விஷ்வ […]
அம்பேத்கர் நினைவு நாள்; சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்ட்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன், நகர செயலார் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்,







