அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளார். கடந்த ஜூன் 5-ந்தேதி தனியார் நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்றார். 8 நாட்களில் பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக திரும்ப முடியாமல் போனது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்ப உள்ளார்.இந்த நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-“இது என்னுடைய […]
நெல்லை மாநகர பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் 2 பேர் சம்பவத்தன்று இரவு, சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர், அப்போது, அந்த கல்லூரி மாணவியிடம், 2 ஆசிரியர்களும் விரும்பத்தகாத வகையில் பேசியதோடு மது குடிப்பதற்கும் அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளையங்கோட்டை […]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது இந்த […]
கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர், கலந்துரையாடல் கூட்ட்டத்தில் பேசியதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்கும் வீடியோ நேற்று வைரல் ஆனது. இது பற்றி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு! என்ற தலைப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் […]
தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின்போது சிகாகோவில் போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க […]
தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது முதல்-அமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.இந்த நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சிகாகோ விமான நிலையத்தில் […]
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் […]
கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர் பேசும்போது, இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பண்ணுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் ஜாமுடன் பண் வாங்கினால் ஜி.எஸ்.டி. உள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கூறினார். இது தொடர்பான […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். சமீப காலங்களில் ஊடகம் மற்றும் நாளிதழ்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி செய்திகளாக வெளிவருவதைப் பார்த்து தமிழக மக்களுடன் நானும் மிகுந்த வருத்தமும், மன வேதனையும் அடைந்துள்ளேன். சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்த தவறிய இந்த திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற […]
நாகை மாவட்டத்திற்கு உள்பட்ட செருதூர் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சில நாட்களுக்கு முன்பாக அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கப்பட்டு தங்களது மீன்பிடி உபகரணப் பொருள்களை பறிகொடுத்தனர். இந்த சூழலில், நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த செருதூர் பகுதி மீனவர்களின் பைபர் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். பின்னர் சக மீனவர்களின் உதவியோடு கரை திரும்பிய 4 மீனவர்களும் ஒரத்தூர் அரசு […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







