அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து வருகிறார். அதன்படி 15-வது நாளான நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது தமிழகத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆலங்குடியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி […]
மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக மல்லை சத்யாஉண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார். […]
பாமக நிறுவனர் ராமதாஸ் , தைலாபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:- சென்னையில் இருந்து பாமக தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரம் இல்லத்தில்தான் செயல்படுகிறது. சென்னையிலோ வேறு பகுதியிலோ தலைமை அலுவலகம் வைத்திருந்தால் அது சட்டத்திற்கு புறம்பானது. பனையூரில் பாமக தலைமையகம் இருப்பதாக சொல்வது, தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது. கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் சிறப்பு பொதுக் குழுவின்படி பாமகவின் செயல் […]
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர், திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த […]
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் ளித்தார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்குமாரை அழைத்துச்சென்ற போலீசார், கடந்த மாதம் 28ம் தேதி அவரை அடித்துக்கொன்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அஜித்குமாரை அடித்துக்கொன்ற 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டது தொடர்பான […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.7.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது. பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர் இந்நிலையில், தற்போது, […]
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் கபாலீசுவரர் கலைக்கல்லூரி விழாவில் இன்று காலை பங்கேற்க இருந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலையில் நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய மருத்துவ அறிகுறிகள் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட […]
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77. சென்னை ஈச்சம்பாக்கத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில், பிள்ளையோ பிள்ளை படம் அவருடைய தந்தை கருணாநிதி கைவண்ணத்தில் உருவானது. கலைவாரிசாக மு.க. முத்துவை […]
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இளைஞர் அணி சங்கொலி சந்தா வழங்குதல், மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் கூட்டம் மற்றும் தலைமைக் கழகம் தாயகத்தில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ச.இசக்கியப்பன், ஆர்.இரத்தினசாமி, அ.பெரியார், சி.பூப்பாண்டி, மு.மாரிமுருகன், ஜெ.சிவராமன், ப.தினேஷ், டி.கே.சரவணன், தமிழீழ சோமு, எம்.டி.சி. சங்கையா, பி.ஆர்.முருகன், டி.தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை […]
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுருளி அருவி பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடியான எழில்முதல்வன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், தேனி மாவட்டம், கருநாக்கன்நுத்தன்பட்டியைச் சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இரட்டை கொலை வழக்கை விசாரித்த தேனி கோர்ட்டு குற்றம் சாட்டப்பட்ட திவாகருக்கு, தூக்குத் தண்டனை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







