கேரளாவில் ஐந்தாவது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. கோழிக்கோடு, கேரளாவில் ஐந்தாவது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது.அங்கு கடந்த நான்கு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வந்த நிலையில், நேற்றும் 1465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறிய அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி, […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது 59). இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மா பட்டியில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.இவரது மனைவி உமாகோமதி(55). இவர்களது மகன் சிவபிரபாகரன்(28) என்ஜினீயரிங் பட்டதாரி. முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முத்துராமலிங்கம் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், ஓய்வூதிய பணத்தை வாங்கி கடனை செலுத்தியதாகவும் […]
ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.தற்போதுள்ள பாலம் அமைத்து 105 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.இந்த பாலத்துக்காக கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும் மண்டபம் பகுதியில் இருந்து தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணியும் கடந்த 3 மாதத்திற்கு மேலாக தீவிரமாக நடந்து வருகிறது.இதனிடையே புதிய […]
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3.6.2021 அன்று, ”தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்” என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.வீடு பெறும் எழுத்தாளர்கள் அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதி பிறந்த நாளில் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த சங்கரநாராயணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியராக திருநெல்வேலி பயிற்சி துணை ஆட்சியராக இருக்கும் மகாலட்சுமி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி புதிய கோட்டாட்சியர் மகாலட்சுமியின் தந்தை தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்துக்கொண்டு சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். உதவும் உள்ளங்கள் என்ற சமூக அமைப்பின் உதவியால் பள்ளிக்கல்வியை முடித்த மகாலட்சுமி மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரியில் 2௦15-ம் ஆண்டு பி,டெக். படித்து முடித்தார்.பின்னர் […]
கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் கோவில் 58 ஆம் ஆண்டு கொடை விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.இதையொட்டி இன்று அன்னதான திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், 24-வது வார்டு அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி தலைமையில், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அன்னதானத்தை தொடங்கி வைத்தார இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அம்மா […]
ரெயிலில் பயணம் செய்யும்போது இனி கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.இந்தப் புதிய விதிகளின்படி, பயணிகள் ரெயில் வகுப்புகளைப் பொறுத்து 35 முதல் 70 கிலோ வரை லக்கேஜை இலவசமாக கொண்டுசெல்லலாம். அதன்படி, ஏ.சி. முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் 70 கிலோ வரை லக்கேஜையும் ஏ.சி. இரண்டாம் வகுப்பில் பயணிப்பவர்கள் 50 கிலோ வரை லக்கேஜையும் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.ஏ.சி. […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.இந்த சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள அப்துல்கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்ற 16 மாணவ மாணவியர்கள் இன்று (3.6.2022) மாவட்ட […]
‘தினத்தந்தி’ ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும். அதன்படி, ‘கலைஞர் எழுதுகோல் விருது’ க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.திருச்சிராப்பள்ளி […]
உலக கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: ஓட்டப்பிடாரம் மகேசுக்கு பாராட்டுமலேசியாவில் நடைபெற்ற 6 வயதுக்கு மேற்பட்டோருக்கான 18வது உலக கராத்தே போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இவர்கள் 21 பிரிவுகளில் போட்டியிட்டு 12 தங்க பதக்கங்களையும், தலா 5 வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்று அசத்தினர். இந்தநிலையில் தமிழகம் திரும்பிய அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாணவ, மாணவியர் கராத்தே போட்டியில் சாதித்தது குறித்து மகிழ்ச்சி […]







