மாநில சிலம்ப போட்டி: பரிசுகள் வென்ற மாணவ மாணவிகள் 16 பேருக்கு பாராட்டு
![மாநில சிலம்ப போட்டி: பரிசுகள் வென்ற மாணவ மாணவிகள் 16 பேருக்கு பாராட்டு](https://tn96news.com/wp-content/uploads/2022/06/2f98d4e9-223d-4589-af9b-7a29c0a719d2-e1654249148910-850x509.jpg)
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.
இந்த சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள அப்துல்கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்ற 16 மாணவ மாணவியர்கள் இன்று (3.6.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாணவ மாணவியர்களை பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார், தற்காப்பு பயிற்சி பள்ளி பயிற்சியாளர் அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)