அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் (வயது 40) வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது அவரது சொந்த அண்ணன் ராஜபாண்டி (42) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தின் குலைநடுக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் முதல் மனைவியின் மகன் ராஜபாண்டி மற்றும் இரண்டாம் மனைவியின் மகன் ராஜராஜன் ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட […]
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் […]
கோவில்பட்டியில் 19-ந் தேதி விளையாட்டு காயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி; பிரபல டாக்டர்கள் பங்கேற்கிறார்கள்
கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் வருகிற 19-ந்தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு விளயாட்டு காயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. வலிமைப் பயிற்சிகள் காயங்களை தடுக்கும் வழிகள் மற்றும் விளையாட்டு காயங்களைத் தடுக்கும் திட்டம், வலிமைக்கான பயிற்சி செயல்திறன் மற்றும் காயங்களைத் தடுத்தல் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் நடக்கிறது, டாக்டர்கள் எஸ்.ஆர்.சுந்தரராஜன் (தலைவர் – IAS, TNGA) எஸ். மாரிமுத்து, (செயலாளர் -TNOA), எஸ்.மகேஷ்ராம் (பொருளாளர் – IAS, TNOA) என்,.மணிகண்டன் (முன்னாள் தலைவர் – TNOA) […]
நாடு முழுவதும் செப்டம்பர் 4ம் தேதி செய்தித்தாள் விநியோகிப்பவர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகள் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்த்து அதன் மூலம் உயர் கல்வி கற்று உயர் பதவிகளை அடைந்துள்ளனர். செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் செப்டம்பர் 4ம் தேதி பேப்பர் பாய் தினம் கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்திதாள்களை இல்லங்களில் கொண்டு சேர்ப்பவர்களை […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க ‘ஜூசாட்-1 ஏ’ என்று அழைக்கப்பட்ட ‘இ.ஓ.எஸ். 5′ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17′ ராக்கெட்டில் பொருத்தி விண்ணுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டது. இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததையடுத்து ராக்கெட்டுக்கான ‘கவுண்ட்டவுன்’ நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் முடிந்ததையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் […]
நாடு முழுவதும் செப்டம்பர் 5ம்தேதி முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முன்கூட்டியே இன்று 3 -ந் தேதி நடந்த ஆசிரியர் தின விழாவில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி கவுரவப்படுத்தினர். ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் […]
தமிழக அரசின் குறு சிறு நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் இணைந்து தொழில் முனைவோருக்கான சுயதொழில் கடன் திட்டங்கள் மற்றும் உத்யம் சான்றிதழ் பதிவு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை இன்று நடத்தின. இந்த கருத்தரங்கு கோவில்பட்டி சௌபாக்யா மஹாலில் நடந்தது. கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் […]
தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிட்டார். இவரை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். இத்தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, வி.எஸ். பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரண்டாம் இடம் பிடித்த தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் […]
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது. நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் பஸ்சை ஓட்டினார். சுண்டலம்பட்டியைச் சேர்ந்த முருகன் கண்டக்டராக இருந்தார். பஸ் சில்nசுமார் 50 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் ராஜபாளையம் செல்லும் சாலையில் உள்ள சுண்டலம்பட்டியில் பயணிகளை இறக்கி விட்டு நெல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பகுதியில் உள்ள என்சினிலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. இதை கவனித்த டிரைவர் […]
கோவில்பட்டியை சேர்ந்த ரூபன் பவுல் என்ற கல்லூரி மாணவர் கடந்த ஜனவரி மாதம் கோவில்பட்டியில் இருந்து 500 ரூபாய் டிக்கெட் எடுத்து தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தார். கோவை காருண்யா நகருக்கு டிக்கெட் எடுத்து பயணம் செய்து அவரை கோவை காந்திபுரத்தில் பஸ் கண்டக்டர் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி கல்லூரி மாணவரைபாதியில் இறக்கி விட்ட தனியார் […]







