கோவில்பட்டி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் குடிநீர், சாலை, மின் விளக்கு வசதி கோரி மனு
கோவில்பட்டியை அடுத்த அப்பனேரி பஞ்சாயத்து உட்பட்ட வெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்போர் நலசங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் ஐ இன்று ஜூலை 14 சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு முதலில் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் பகுதியில் நாய்கள் தொந்தரவு மிகவும் அதிகமாக உள்ளது. சிறுவர் சிறுமிகள் வெளியே வருவதற்கே பயப்படுகிறார்கள். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நாய்கள் விரட்டியதால் விழுந்து காலில் அடி பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
. எனவே வெங்கடேஸ்வரா கார் பகுதிகள் சுற்றி தெரியும் நாய்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் பகுதியில் சில தெருக்களில் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்துஉள்ளது. இதனை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சிக்கிறார்கள். எனவே அனைத்து தெருக்களிலும் அதிக வெளிச்சம் தரக்கூடிய வழக்குகளை பொருத்த பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்து மிக முக்கியமான அடிப்படை வசதிகளில் ஒன்று குடி நீர். நாங்கள் வசிக்கும் பகுதியில் ஆழ்குழாய் தண்ணீர் குடிப்பதற்கும் சமையலுக்கும் உகந்ததாக இல்லை. ஆகவே எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே அமைத்த சாலைகள் கன ரக வாகனங்கள் அதிகமாக செல்வதால் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே பகுதியில் உள்ள கல் சாலைகளை தார் சாலையாக மாற்றம் செய்ய வேண்டும்.
அது போல் கழிவு நீர் செல்வதற்கு வாறுகால் வசதியையும் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







