மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள் சங்கத்தினருடன் நகர்மன்ற தலைவர் ஆலோசனை
கோவில்பட்டி நகரில் மிக முக்கியமான சாலைகளில் ஒன்று மந்தித்தோப்பு சாலை. இப்பகுதியில் குடியிருப்புகள் பெருகி வருகின மக்கள் தொகை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் இந்த சாலை குறுகலான, குண்டும் குழியுமான காட்சி அளிக்கிறது. இச்சாலை விரிவாக்கம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள் சங்கம், குடியிருப்போர் சங்கம் சார்பாக, தமிழ்நாடு முதலமைச்சருக்கு 1000 அஞ்சல் அட்டை அனுப்புவது உட்பட கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என அறிவிப்பு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து போராட்ட குழுவினரை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் ஆர்,எஸ். ரமேஷ் அழைத்து பேசினார். மந்தித்தோப்பு சாலை விரிவாக்கம் செய்யப்படவேண்டியது என்ற கோரிக்கையில் போராட்டக்குழு உறுதியாக இருந்ததால், போராட்டங்கள் தொடரும் என்றும் அதுவரை, சாலையை தரமான முறையில் செப்பனிட்டு தரவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

பேச்சு வார்த்தையில் நகராட்சி பொறியாளர் சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் சாந்தி மீனா, போராட்டக் குழு சார்பாக க தமிழரசன் , அபிராமி முருகன், சுபேதார் கருப்பசாமி, செண்பகராஜ், நாஞ்சில் குமார், வியாபாரிகள் சங்க செயலாளர் சங்கர குமார், சி.ஐ.டி.யு,.முத்துராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







