கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை-தேவையான வசதிகள்; முதலமைச்சருக்கு த.மா.கா கடிதம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், தேவையான வசதிகள் கோரியும் முதலமைச்சருக்கு தமிழ் மானில காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவில்பட்டி கோட்ட தலைமை அஞ்சலகம் ,முன்பு இன்று ஜூலை 13 பகலில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் விக்னேஷ்ராஜா, வட்டார தலைவர்கள் கனிராஜ், முத்துப்பாண்டியன், மாவட்ட துணை தலைவர் முத்துசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் அய்யாதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் வைரம், மாவட்ட பொதுச் செயலாளர் சுப்புராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்பாண்டியன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.தொடர்ந்து அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஐய்க்கு பதிவு தபாலில் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக விளங்கும் கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தேசிய நான்கு வழிச்சாலையில் கோவில்பட்டியில் அமைந்துள்ளதால் விபத்துகளில் சிக்குவோர் முதலில் இங்கு தான் சிகிச்சைக்காக கொண்டு வரப்படுவார்கள்.
மேலும், கோவில்பட்டியை சுற்றியுள்ள 38 கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வருவதால், தினமும் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதும். அதே போல், உள்நோயாளிகள் பிரிவும் நிரம்பியே காணப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் இதய நோய் பிரிவு, நரம்பியல் பிரிவு நிபுணர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், மருத்துவமனைக்கு நிரந்தர தீக்காய பிரிவு மருத்துவர், நியமிக்கப்படவில்லை. இதய நோயாளிகள் திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது. அதே போல், நரம்பியல் மருத்துவர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளது.
மேலும், தீக்காய பிரிவு மருத்துவர், சிறுநீரக கற்களை உடைக்கும் கருவிகள் இருந்தும் பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் இல்லை. எனவே நிரந்தர மருத்துவர் நியமிக்க வேண்டும். காலிபணியிடங்கள் நிரப்பட வேண்டும். மேலும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் தனியார் ஸ்கேன் மையங்களுக்கு நோயாளிகள் செல்லும் நிலை உள்ளது. மாவட்ட அரசு மருத்துவமனையில் இயங்க வேண்டிய இணை இயக்குநர் அலுவலகத்தை உடனடியாக கோவில்பட்டியில் அமைக்க வேண்டும்.
மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய சிமெண்ட் சாலையில் நோயாளிகளை ஸ்ட்ரக்சரில் தள்ளி செல்லும் பொழுது அவர்கள் ரண வேதனையில் உள்ளதை கவனத்தில் கொண்டு உடனடியாக சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். புதிதாக பேவர் பிளாக் சாலை அமைத்தால் சிறிது காலங்களில் மேடு பள்ளங்கள் உருவாகி விடும் என்பதால் மீண்டும் சிமெண்ட் சாலையை அமைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்

மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ நிபுணர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். சி.டி. ஸ்கேன் வசதியும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது,







