கல்லூரி மாணவ மாணவியருக்கு சீருடை பணியாளர் தேர்வு விழிப்புணர்வு பயிற்சி
Oplus_16908288
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வணிக நிர்வாகவியல் துறை மற்றும் சீருடை பணியாளர் பயிற்சி கழகம் சார்பாக சீருடை பணியாளர் தேர்வு மற்றும் இந்திய குடிமையியல் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்விற்கு கல்லூரியின் சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் முனைவர் மகேஷ் குமார் தலைமையேற்று பேசினார். துறையின் தலைவர் ச. சிவசங்கர் வாழ்த்தி பேசினார்.
கோவில்பட்டி ஜீனியஸ் ஜ ஏ எஸ் அகாடமி இயக்குநர் குரு. ச.சங்கர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி மற்றும் கோவில்பட்டி ஜீனியஸ் ஐ ஏ எஸ் அகாடமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிறப்பு சொற்பொழிவு

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக சந்தை படுத்துதலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி இயக்குநர் முனைவர். பா.மகேஷ்குமார் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை, தியாகராயர் கல்லூரி, வணிகவியல் நிர்வாகவியல் துறை உதவிப்பேராசிரியர் சி.சதீஷ்குமார் கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவின் சமகால வளர்ச்சி பற்றி உரையாற்றினார்

விழா முடிவில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர். மதன கோபால் நன்றி கூறினார்.







