கோவில்பட்டியில் மாவட்ட விவசாய சங்க மாநாடு ; புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராகவன் தலைமையில் நடைபெற்ற மாவட்டை துவக்கி வைத்து மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் பேசினார். மாவட்ட செயலாளர் புவிராஜ் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.
மாநாட்டில் ஜார்ஜ் நியூட்டன் வரவேற்புரை ஆற்றினார். கு.ராமசுப்பு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில தலைவர் ரவீந்திரன் உரை ஆற்றினார். மாவட்ட துணை செயலாளர் மணி எந்த சுப்பையா நன்றி கூறினார்.

மாவட்ட தலைவராக ஆர்.ராகவன், செயலாளராக பா.புவிராஜ், பொருளாளராக எஸ்.நம்பிராஜன், துணைத் தலைவராக தி.சீனிவாசன் , கணபதி , ராமசுப்பு, பாலமுருகன்
துணைச் செயலாளராக மணி (எ) சுப்பையா , செல்வராஜ், மணி, பத்மாவதி ஆகிய 11 மாவட்ட நிர்வாகிகள் உட்பட 35 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தேர்தல் காலத்தில் தவெக அரசு வாக்குறுதி அறிவித்த அடிப்படையில் பயிர்க்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்திட வேண்டும்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பழைய முறையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் .புதிய திட்டத்தை மாற்றி சட்டம் இயற்றிட வேண்டும்.
* தாமிரபரணி ஆற்றில் கழிவு நீரை கலப்பதை தடுத்து தூய்மைப்படுத்த வேண்டும்.

* நெல்,கோதுமை,பருத்தி போன்ற பயிர்களுக்கு விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அரசு அறிவித்த விலையை உத்தரவாதம் படுத்திட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டை செப்டம்பர் 27,28 ,29 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.







