இணையதளம் உருவாக்கம்: கல்லூரி மாணவர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு
Oplus_16908288
கொவில்பட்ட்டி கோ.வேங்கடசாமி நாயுடு கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறை சார்பாக “Web Development” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு 2 நாட்கள் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, இளங்கலை மூன்றாமாண்டு மாணவி . மாரீஸ்வரி வரவேற்று பேசினார்.. தொடர்ந்து, இளங்கலை மூன்றாமாண்டு மாணவி ராஹினிஸ்ரீ சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாண்டியராணி தலைமை தாங்கி பேசினார்.

, கல்லூரி இயக்குநர் மகேஷ்குமார் வாழ்த்துரையாற்றி, மாணவர்கள் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் வகையில் இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் காலத்தின் தேவையாகும் என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் Alpha Learning Lume, சிவகாசி நிறுவனத்தின் இயக்குநர் . பாலமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘இணையதள உருவாக்கம்’ (Web Development) என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் மாணவர்களுக்கு இணையதள (Website) வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தொடர்பான அடிப்படைக் கருத்துகள், நவீன இணையத் தொழில்நுட்பங்கள் மற்றும் செயலி (App) உருவாக்கும் நடைமுறைகள் குறித்த விரிவான செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் கணினி பயன்பாட்டுத் துறையைச் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.நிகழ்ச்சியின் நிறைவாக, இளங்கலை மூன்றாமாண்டு மாணவர். சுப்புராஜ் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை , கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் எம். காந்திமதி மற்றும் உதவிப் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.







