கோவில்பட்டி அருகே எழுத்தாளர் பூமணி உடல், அரசு மரியாதையுடன் அடக்கம்


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் தனது 79 வது வயதில் காலமானார்
கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம் ஆகும்.

கரிசல் மண் மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், சாதி அமைப்பு, உழைப்பாளர்களின் வாழ்க்கை உள்ளிட்டவற்றை யதார்த்தமாக பதிவு செய்தவர்.
சென்னையில் இருந்து எழுத்தாளர் பூமணி உடல் கோவில்பட்டி கொண்டு வரப்பட்டு பாரதி நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பாக, எழுத்தாளர் பூமணி உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத்தின் பொதுச்செயலாளர் எழுத்தாளர் களப்பிரன் தலைமையில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்,மாநில துணைப் பொதுச்செயலாளர்,லட்சுமி காந்தன், துணைத்தலைவர் எழுத்தாளர்.உதயசங்கர், மாநில துணைச் செயலாளர் மணிமாறன். மாநிலக் குழு உறுப்பினர். இராமசுப்பு, மாவட்டச் செயலாளர் முத்துராஜ், கோவில்பட்டி கிளைத்தலைவர் அபிராபி முருகன், பொருளாளர் வேல்ச்சாமி, சாரதி, திடவை பொன்னுச்சாமி, கவிஞர் முருகேஸ்வரி, ஓவியர் மாரிஸ், தேவதச்சன், சிந்தா மதார், சங்கரநாராயணன்,தினேஷ்குமார், பிரான்சிஸ், ஹரிபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி உடலுக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டணியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இக்கூட்டமைப்பின் தலைவர் க. தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பையா, மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அபிராமி முருகன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை பகலில்) பூமணி உடல் கோவில்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கொண்டு செல்லப்பட்டது, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது,







