கோவில்பட்டியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி
ஓசோன் படலத்தை பாதுகாக்கவும்,சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் செப்டம்பர் 16ம் தேதி உலக ஓசோன் தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக ஓசோன் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்ட்டது. கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தேசிய பசுமை படை ஆசிரியர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி மகப்பேறு மற்றும் பொது மருத்துவர் கமலா மாரியம்மாள் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ரெங்கம்மாள், கவுரி, முத்து முருகன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மணிகண்ட மூர்த்தி, மாரியப்பன், பள்ளி ஆசிரியர்கள் கண்ணன், சென்னப்பன், ஜோசப் ஷெல்டன்,உள்பட பள்ளி ஆசிரியர்கள்,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.
அரசு மகளிர் பள்ளியில் இருந்து பேரணி புறப்பட்டது. மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். எட்டையாபுரம் மெயின் ரோடு ,செண்பகவல்லி அம்மன் கோவில்தெரு, ஸ்கூல் தெரு,மற்றும் முக்கிய விதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தொடர்ந்து மாணவிகளுக்கு உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.







