3 நாட்களாக போராட்டம்:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தொழிலாளர்களுடன் நிர்வாகம் பேச்சு நடத்த நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்
புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க செயலாளர் த.இரமேசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுச்சேரி மத்திய நிறுவனமான ஜிப்மர் நிர்வாகத்தில் குறைந்த பட்சம் 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 550 க்கு மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள்
கடந்த 3 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் மாதந்திர ஊதியத்திற்குரிய சம்பள ரசீது வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஜிப்மர் நிர்வாகம் நடைமுறைபடுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழலால் மருத்துவமனைக்கு வருகின்ற புறநோயாளிகள் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்
ஜிப்மர் நிர்வாகம் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதும் தமிழர்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை காலில் போட்டு மிதிப்பதனை நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது
.
தமிழின விரோதப்போக்கினை ஜிப்மர் நிர்வாகம் உடனே கைவிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களுக்கு மேலாக போராடி வரும் 550க்கு மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்களை போராட்ட களத்தில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகளை ஜிப்மர் நிர்வாக இயக்குனர் உடனடியாக அழைத்து பேசி நிரந்தர தீர்வு காண நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
ஜிப்மர் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு ஏற்படுத்த இல்லையென்றால் இத்தகைய போராட்டம் தொடர்ந்து நீடிக்கும். ஆனால் நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் தொழிற்சங்கம் மக்களை திரட்டி ஜிப்மர் நிர்வாகத்திற்கெதிராக போராட்ட களத்தில் ஈடுபடும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவித்து கொள்கிறோம்
.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







