• November 29, 2026

5 பள்ளிகளுக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்

 5 பள்ளிகளுக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்

கோவில்பட்டி சாய் சிட்டி ஆர்ஷ சேவாகேந்திரா சார்பில் 5 பள்ளிகளுக்கு இலவசமாக குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட்டன..

சிங்கிலிபட்டி இந்து தொடக்கப்பள்ளி,,  சங்கனாப்பேரி இந்து தொடக்கப்பள்ளி,, கனகசபா பேரி ஸ்ரீ சுப்பிரமணிய வித்யாசாலை, புளியங்குடி ஆண்டியப்ப நடுநிலைப்பள்ளி, சொக்கம்பட்டி அரிசன் தொடக்கப்பள்ளி. ஆகிய  5 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு  கருவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் அமைத்து வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை  அம்மா நாரணம்மாள் திருப்பாவை பாடல் பாடி தொடக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக நாட்டு நலப்பணி திட்ட  முன்னாள் அலுவலர் சுப்பா ராஜூ கலந்து கொண்டார்.

சேவா சங்கத் தலைவர் சீனிவாசன் பேசுகையில், திருக்குறளின் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்து மனப்பாடம்  செய்யும்படி வலியுறுத்தினார்.

மேலும் அப்பள்ளிகளுக்கு இருக்கை, பெஞ்சுகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது,. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதர்ஷ கேந்திரா செய்தி  தொடர்பாளர் கலா ராணி செய்திருந்தார் 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *