தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு; எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு
இந்தியாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. அதேவேளை மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதில் இருந்து மகளிருக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீதம் அதிகரிக்க வகை செய்வதுடன் இந்த நடைமுறை அடுத்த 25 ஆண்டுகள் அமலில் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும்போது தற்போது உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை (மாநிலங்கள் 815, யூனியன் பிரதேசங்கள் 35) அதிகரிக்கலாம். இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மசோதா போதிய ஆதரவு இன்றி வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

அதேவேளை, தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது/. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், போதுசெயாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் கலந்து கொண்டனர்,.
கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது,. இது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசா ,செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கிறோம். நியாயமான தொகுதி மறு வரையறை என்பதை தற்போது அல்ல எப்போதுமே திமுக ஆதரித்து வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தற்போது தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 எனும் அளவில் இருக்கும் நிலையில் புதிய மசோதாவால் 7.21 என உயர்கிறது. தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடாகும்.
எங்களுடன் இருக்கும்போது காங்கிரசுக்கு வழிகாட்டியாக நியாயமான தொகுதி மறுவரையறையை கூறியதே திமுகதான்.

தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கான எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையாது என்பதால் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். மாநில உரிமைகளை பாதுகாப்பதில் திமுக எப்போதும் முன்னணியில் உள்ளது. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு நஷ்டம் எதுவுமில்லை. அதனால், தொகுதி மறுவரையறையை திமுக ஆதரிக்கிறது.
இவ்வாறு ஆ.ராசா கூறினார்.







