கோவில்பட்டி அரவிந்த் மருத்துவமனையில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்
பைல் போட்டோ
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அப்பனேரி கண் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் (விழித்திரை) பரிசோதனை முகாம் நாளை 29.11.2026 ஞாயிறு காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது,
சர்க்கரை நோய் உள்ளவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளதா என தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள்
உடல் பருமனாக உள்ளவர்கள் அதிக பசி, தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல்,ஆறாத புண்கள் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்] இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம்,.

நாளை நடக்கும் முகாமில் கலந்து கொள்வதால் ஆரம்ப நிலையிலேயே விழித்திரை பாதிப்பை கண்டறிவதால் பார்வை இழப்பை தவிர்க்க முடியும். சர்க்கரை நோயால் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சர்க்கரை நோய்க்கான ரத்தப் பரிசோதனை இலவசமாக செய்யப்படும். கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வழியாக கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை தொலைபேசி எண்கள் 04632-290800, 85250 66250, 85258 22027







