• November 18, 2026

மத்திய மந்திரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு;  முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை

 மத்திய மந்திரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு;  முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை

ராமேஸ்வர துறைமுக மேம்பாடு முதல் பக்கிங்காம் கால்வாய் புனரமைத்தல் வரை மத்திய மந்திரியிடம், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனாவால் அவர்களை இன்று (17.11.2026) புதுடெல்லியில் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியுதவி கோரி கோரிக்கையை சமர்ப்பித்தார்.

பின்வரும் திட்டங்களுக்கு உடனடி நிதியுதவி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

1. ராமேஸ்வரம் துறைமுக மேம்பாடு (ராமேஸ்வரம் தலைமன்னார் (இலங்கை) பன்னாட்டு பயணிகள் படகு போக்குவரத்து துவங்குதல் – ரூ.118 கோடி

2. கடலூர் பசுமை வள ஆழ்கடல் துறைமுக மேம்பாடு – ரூ.4,700 கோடி

3. கடல் நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகள் அமைத்தல் (சென்னை மெரீனா, மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி) – சென்னை புதுச்சேரி பயணிகள் படகு போக்குவரத்து துவக்குதல் – ரூ.900 கோடி

4. பக்கிங்காம் கால்வாய் புனரமைத்தல் மற்றும் ஆழப்படுத்துதல் (தேசிய நீர்வழி 4) – 5.2,700

5. மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியை இணைக்கும் பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு ஆழப்படுத்துதல் – ரூ.1,200 கோடி

இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *