• November 18, 2026

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட அரசின் தடையை ஐகோர்ட்டு ரத்து செய்தது

 தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட அரசின் தடையை ஐகோர்ட்டு ரத்து செய்தது

தமிழகத்தில் உட்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும், அவற்றை தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலைமாதம்  திருத்தம் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரியும் மது பிரேமநாதன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருத்த விதிகளுக்கு ஐனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் தங்களுக்கு சொந்தமானது எனவும், அவற்றை எங்கு விற்க வேண்டும் என முடிவெடுக்க மனுதாரருக்கு உரிமை உள்ளதால், 3 மாத தடையை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவித்து தீர்ப்பளித்தனர்.

மேலும், அந்த விதிகளின் அடிப்படையில் கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசின் தடையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், எம்.சாண்ட் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்வதற்கான தடையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு கடந்த மாதம் 26-ந்தேதி உத்தரவிட்டு இருந்து குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *