• November 18, 2026

டாஸ்மாக் கடை முன்பு  பஸ்சை  நிறுத்தி மதுபாட்டில் வாங்கிய வீடியோ: கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட்

 டாஸ்மாக் கடை முன்பு  பஸ்சை  நிறுத்தி மதுபாட்டில் வாங்கிய வீடியோ: கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி நோக்கி TN 72 N 2826 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ் , பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது, சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு இந்த பஸ்  திடீரென நிறுத்தப்பட்டது.

பஸ்  நின்றதும், டாஸ்மாக் மதுபானக் கடைக்குள் இருந்து வெளியே வந்த நபர் ஒருவர் கையில் மது பாட்டிலுடன் பஸ்சை  நோக்கிச் சென்றார்.

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்தபடி, “பயணிகளுடன் செல்லும் பஸ்சை  நிறுத்தி யாருக்காக மது வாங்குகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த நபர், பஸ் நடத்துநருக்காக மது பானம் வாங்கித் தருவதாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

பயணிகளின் உயிருக்குப் பொறுப்பான அரசுப் பஸ்  ஊழியர்களின் இந்த செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து அந்த பஸ் டிரைவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் பஸ்சின்  தற்காலிக நடத்துனரும் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *