• October 22, 2026

கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடுவது கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

 கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடுவது கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியப் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவின்படி தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார்.

மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, தனியார் பள்ளிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் வராது என்றாலும், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எனவே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண விவரங்களைத் தங்களது பள்ளி விளம்பரப் பலகைகளில் கட்டாயம் வெளியிட வேண்டும் 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *