“பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் “குழந்தைகளை காப்போம் மற்றும் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பிரபு தொடக்கி வைத்தார்.பேராசிரியர் லாவண்யா வரவேற்புரை நிகழ்த்தினார் சிங்கப்பெண் அதிரடிப்படை காவல் ஆய்வாளர் காந்திமதி பெண்கள் சமுதாயத்தில் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் அப்பிரச்சினையிலிருந்து எவ்வாறு தன்னை தற்காத்து கொள்வது என்பது பற்றியும் எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வழக்கறிஞர் விஜயகுமார் மக்களுக்கான அடிப்படை உரிமை பற்றியும் பெண்களுக்குன்டான பல்வேறு சட்டங்கள் குறித்தும், அச்சட்டம் எவ்வாறு பயன்படுகின்றது என்பது பற்றியும் மிக சிறப்பாக உரையாற்றினார்.
சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா ஆண் பெண் இருவருக்கும் சுயஒழுக்கம் மிக அவசியம் என்பதை சிறு கதையின் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
நிதி சார் கல்வி நிபுணர் ஜெயலட்சுமி , முருகப்பெருமாள் மற்றும் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்

மாணவிகளுக்கு பெண் கல்வி குறித்து. ஓவிய போட்டி மற்றும் நாடகப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பேராசிரியர் வரதராஜம்மாள் நன்றியுரையாற்றினார்







