பணி நிறைவு பெற்ற கல்லூரி முதல்வருக்கு பாராட்டு
பணி நிறைவு பெற்ற கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமிக்கு பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் சந்திரன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் திருமலை முத்துசாமி முன்னிலை வகித்தார்.

பணி நிறைவு பெற்ற கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி ஏற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், டாக்டர் மாசிலாமணி, ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் நம்.சீனிவாசன், பேராசிரியர் சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








